புலியை பார்த்து சூடு போட்ட பூனை! இந்தியா சறுக்கியது "இங்கேதான்".. மோசமாக தோற்றது எப்படி? 5 காரணங்கள்
சிட்னி: உலகக் கோப்பை டி 20 தொடரில் செமி பைனல் ஆட்டத்தில் தோல்வி அடைந்து இந்தியா மீண்டும் ஏமாற்றம் அளித்து உள்ளது. மீண்டும் டி 20 உலகக் கோப்பையை வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்து உள்ளது.
இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி 20 உலகக் கோப்பை செமி பைனல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்து உள்ளது. மோசமான பவுலிங் காரணமாக இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடியது. கடைசியில் பாண்டியாவின் 63 ரன்கள் அதிரடியால் இந்திய அணி 168 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அதிரடியாக ஆடி வெறும் 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வென்றது. பட்லர் 80, ஹேல்ஸ் 86 ரன்கள் எடுத்து இன்று அசத்தினர். இன்று இந்திய அணி தோல்வி அடைய 5 முக்கியமான காரணங்கள் உள்ளன.

காரணம் 1
இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்தின் ஸ்லோ பந்துகள் பயன் அளித்தன. இதில் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்மார்ட் கேம் ஆடினார்கள். பொதுவாகவே ஜோர்டன் ஸ்லோ பால் போடுவார். இன்றும் அவர் ஸ்லோ யார்க்கர் வீசினார். அதேபோல் ஸ்பின் பவுலர்களும் மிகவும் மெதுவாக போட்டனர். இவர்கள் மெதுவாக அவுட் சைடில் பந்து வீசியதை இந்திய பேட்ஸ்மேன்களால் சரியாக அடிக்க முடியவில்லை. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

காரணம் 2
அதேபோல் மிடில் ஓவர்களில் இந்தியா போதுமான ரன் அடிக்கவில்லை. அடில் ரஷீத் 4 ஓவர் வீசி வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இவரின் ஓவர் சிறப்பாக இருந்தது. இவர் மற்றும் ஜோர்டன் வீசிய ஸ்லோ பால் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினார்கள். முக்கியமாக ரோஹித் சர்மா பந்து சரியாக மாட்டாமல் இடையில் இடையில் கோபமாக கத்தினார்.16 ஓவர்கள் வரை இந்திய அணிக்கு பேட்டில் பந்து மாட்டவே இல்லை.

காரணம் 3
இந்திய அணியின் பவுலிங் இன்று மிக மோசமாக இருந்தது. இங்கிலாந்து அணி ஸ்லோ பந்துகளை போட்டு இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் இந்திய அணியின் பலம் ஸ்விங்தான். அதை பின்பற்றாமல் இந்திய அணியும் ஸ்லோ பால் போட முயன்றது. ஆனால் இங்கிலாந்து அணியிடம் இந்த பவுலிங் எடுபடவில்லை. இந்தியா இன்று ஸ்விங் செய்யவே இல்லை. புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல இந்திய அணியின் பவுலிங் இருந்தது.

காரணம் 4
அதேபோல் இந்திய அணியின் கேப்டன்சியும் இன்று மிக மோசமாக இருந்தது. இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கவில்லை என்றதும் சரியாக பவுலர்களை ரொட்டேட் செய்து இருக்க வேண்டும். அதேபோல் அவரின் பீல்டிங் நிற்க வைத்த முறையும் மோசமாக இருந்தது. அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே இன்று சொதப்பலாக இருந்தது.

காரணம் 5
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் சிறப்பாக பீல்டிங் செய்தது. ஆனால் இன்று இந்திய வீரர்களுக்கு பீல்டிங் செய்வதில் க்ளுவே இல்லை. நிறைய குழப்பங்கள் மைதானத்தில் இருந்தது. வீரர்கள் ஒரு விதமான டென்சனோடுதான் இருந்தனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அவர்களிடம் ஒரு பதற்றம் இருந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications