நடுவானில் தூங்கிய விமானி.. கடல் கடந்து சென்ற விமானம்.. எப்படி எஸ்கேப் ஆனார்ன்னு பாருங்க!
ஆஸ்திரேலியாவில் விமானி ஒருவர் விமானத்தை ஓட்டும் போதே தூங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சிட்னி: ஆஸ்திரேலியாவில் விமானி ஒருவர் விமானத்தை ஓட்டும் போதே தூங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக உயர் ரக விமானங்களில் ஆட்டோ பைலட் என்ற வசதி இருக்கும். நீண்ட தூரத்திற்கு விமானத்தில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை என்றால் இதை ஆன் செய்துவிட்டு, புத்தகம் படிப்பது சாப்பிடுவது உள்ளிட்ட வேலைகளை விமானிகள் செய்வார்கள். ஆனால் இந்த வசதி இல்லாத சிறிய ரக விமானங்களை கடைசி வரை விமானிகள்தான் இயக்க வேண்டும்.
அப்படி ஒரு சிறிய ரக விமானத்தை இயக்கிய ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பாதியில் தூங்கி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் தாஸ்மேனியா பகுதியில் இருந்து கிங்ஸ் தீவிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தூங்கினார்
விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தவர் அப்படியே அசதியில் தூங்கியுள்ளார். விமானமும் ஒரே வேகத்தில் ஒரே உயரத்தில் நேர்கோட்டில் சென்று இருக்கிறது. இப்படியே விமானம் 50 கிமீ தூரம் சென்றுள்ளது. ஆட்டோ பைலட் இல்லாத சாதாரண விமானம் இப்படி பறந்தது ஆச்சர்யமான விஷயம் ஆகும்.

தாண்டிவிட்டது
இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலிய கடல் பகுதியின் எல்லையை கடக்கும் நிலைக்கு சென்றுள்ளார். அப்படியே நேராக நெடுந்தூரம் சென்றால் அண்டார்ட்டிகாதான் அடுத்து. ஆனால் அவ்வளவு சிறிய விமானத்தில் அத்தனை தூரம் எல்லாம் செல்ல முடியாது.

மீண்டும் வந்தார்
அதிர்ஷ்டவசமாக அவர் திடீர் என்று தூக்கத்தில் இருந்து எழுந்தார். பின் அவசர அவசரமாக விமானத்தை திருப்பியவர் மீண்டும் தாஸ்மேனியா வந்தார். பாதுகாப்பாக தாஸ்மேனியா கிங்ஸ் தீவில் விமானத்தை தரையிறக்கினார்.

விசாரணை செய்யும்
இந்த நிலையில் அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை அந்த விமானியின் லைசன்சிற்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது. மேலும் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விசாரித்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications