இப்படியெல்லாம் சிந்தித்தால் மின்சார கட்டணத்தை குறைக்கலாமா?.. மூளையோ மூளை.. செம ஐடியா
சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டில் மின்சாரத்தை எப்படியெல்லாம் சிக்கனம் செய்வது என்பது குறித்து யோசித்து அதை செயல்படுத்தி அசத்தி வருகிறார்.
"மின்சார சிக்கனம் தேவை இக்கணம்" என்ற சொலவடையை நாம் மின்சார அலுவலகங்களில் பார்த்திருப்போம். இது கோடை காலங்களில் முக்கியமானதும் கூட!
அது மட்டுமல்லாமல் மழை காலமாக இருந்தாலும் சரி தேவையில்லாமல் ஒரு யூனிட் மின்சாரத்தை கூட வேஸ்ட் செய்யக் கூடாது. அது அலுவலகமாக இருந்தாலும் சரி அங்கும் நாம் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக கோடை காலத்தில் கரன்ட் பில் அதிகமாகவும் குளிர் காலத்தில் கரன்ட் பில் குறைவாகவும் வரும். கோடை காலத்தில் ஏசி ஓடும். அறைக்கு அறை ஏசி இருப்பதால் கரென்ட் பில் ஜாஸ்தியாகும். அது போல் ஏசியுடன் சேர்ந்து ஃபேனும் ஓடும். இப்படித்தான் ஆஸ்திரேலியா நாட்டின் டெலிவரி பாய் ஒருவர் மின்சாரத்தை குறைக்க நூதன முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த மார்டின் போங்கியோர்னோ என்பவர் வீட்டில் 2000 ஆஸ்திரேலிய டாலர்கள் கரன்ட் பில்லாக வந்தது. இது கிட்டதட்ட இந்திய மதிப்பில் ரூ 1,11,000 ஆகும். இதனால் என்ன செய்யலாம் என யோசித்தார். அப்போது அவருக்கு தோன்றிய ஐடியாக்களை செயல்படுத்தவும் தொடங்கினார். வீட்டில் ஒவ்வொரு அறையிலும் லைட் இருந்தால் தானே கரென்ட் பில் ஏறுகிறது.
அதைவிட ஒவ்வொரு அறையிலும் இருக்கும் லைட்டுகளை நீக்கிவிட்டு வீட்டுக்கே ஒரே லைட்டாக கொண்டு வந்தார். அதாவது எந்த அறைக்கு செல்கிறாரோ அந்த அறைக்கு ஒரு பல்பை கொண்டு போய் மாட்டி அங்கு வேலையை முடித்துவிடுவார். அதிலும் சூரியன் இருக்கும் வரை அந்த ஒரு லைட்டும் தேவைப்படாது. பின்னர் சுடுநீரில் குளிப்பதற்கு பதிலாக பச்சை தண்ணீரில் குளிக்கத் தொடங்கினார்.
அது போல் அடுப்பில் வைத்து சமைப்பதற்கு பதிலாக பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடத் தொடங்கினார். இப்படியாக தனது வீட்டில் மின்சார கட்டணத்தை குறைத்தார். ஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.8 சதவீதத்தை எட்டிய ஆஸ்திரேலியா உலகளவில் அதிக செலவை எட்டியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications