கெட்ட செய்தி.. என்ன "இவர்" நடக்கவே கஷ்டப்படுகிறார்? அதிர்ச்சி தந்த இந்தியாவின் டாப் வீரர்.. போச்சே
சிட்னி: உலகக் கோப்பை டி 20 தொடரில் நாளை இந்திய அணி ஆட உள்ள நிலையில் இந்திய அணிக்கு ஒரு கெட்ட செய்தி வந்துள்ளது.
உலகக் கோப்பை டி 20 2022 தொடரில் நாளை இந்திய அணி முதல் போட்டியில் ஆட உள்ளது. பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடக்க உள்ளது.
கடந்த வருடம் நடந்த உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்தது.

விக்கெட்
ஒரு விக்கெட் கூட இழக்காமல் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அதிரடியாக வெற்றிபெற்றது. அதன்பின் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் இன்று உலகக் கோப்பை டி 20 தொடரில் நாளை இரண்டு அணிகளும் மோத உள்ளன. இந்திய அணிக்கு இது மிக மிக முக்கியமான போட்டியாகும்.

காயம்
இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா ஆகியோர் இல்லாத காரணத்தால் இந்திய அணியின் பவுலிங்கில் பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் இந்திய அணியில் மூத்த வீரர் முகமது ஷமி மீண்டும் இணைந்து உள்ளார். பயிற்சி ஆட்டத்திலேயே இவர் 4 பந்துகளில் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். இவரின் வருகை இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இவரை இந்திய அணியில் எடுக்க வாய்ப்புகள் உள்ளன.

ஹர்திக் பாண்டியா
இதனால் நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற உள்ளார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆட போகும் இந்திய அணியை ஏற்கனவே தேர்வு செய்துவிட்டதாக ரோஹித் சர்மா முன்பே கூறி இருந்தார். ஆனாலும் இதில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ரோஹித், ராகுல், கோலி, சூர்யா குமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின், அர்ஷிதீப் சிங், சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆட வாய்ப்பு உள்ளது,

என்ன ஆனது?
ஆனால் இந்திய அணிக்கு தற்போது சிக்கலாக வந்து இருக்கும் செய்தி ஒன்றும் உள்ளது. ஹர்திக் பாண்டியா காலில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஐஸ் வைத்து, லேசான பயிற்சிகளை மட்டும் செய்து வருகிறார். ஆனால் அந்த பயிற்சியிலும் கூட அவர் நொண்டி நொண்டி நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாளை நடக்கும் போட்டியில் அவர் ஆடுவதில் திடீரென சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

சிக்கல்
ஹர்திக் பாண்டியா முன்பே காலில் காயம் காரணமாக 6 மாதங்கள் ஆடாமல் இருந்தார். மீண்டும் அணிக்குள் வந்துள்ள அவர் சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக ஹர்திக் பாண்டியா உருவெடுத்து உள்ளார். இந்த நிலையில்தான் திடீரென ஹர்திக் பாண்டியாவிற்கு லேசான காயம் ஏற்பட்டு இருப்பது அணி நிர்வாகத்தினர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications