"அந்த ஒரு கேட்ச்" மிஸ் செய்த இலங்கை.. தனி ஒருவனாய் நியூசிலாந்தை தூக்கி நிறுத்திய பிலிப்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: இலங்கை அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் அசாதாரணமான சதம் ஒன்றை விளாசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் மாபெரும் தருணங்களில் நாட்டுக்காக களமாடி வெற்றிபெற வேண்டும் என்று ஆசை இருக்கும். தமது கனவு நாயகன் களத்தில் செய்ததை, நாமும் செய்ய வேண்டும் என்ற ஆசையுனேயே ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தயாராவார்கள்.

ஆனால்மாபெரும் தருணங்கள் கிடைக்கும் கையில் இருக்கும் போது, பெரும்பாலும் ப்ரஷர் காரணமாக விளையாட்டு வீரர்கள் தவறவிடுவர். ஆனால் அந்த ப்ரஷரை சாமர்த்தியாக கட்டுப்படுத்தி, களத்தில் போராட்டத்தை வெளிப்படுத்தும் வீரன், வரலாற்று நாயகனாக மாறுகிறான்.

நியூசிலாந்து அதிர்ச்சி

நியூசிலாந்து அதிர்ச்சி

அப்படியொரு வரலாற்று தருணம் தான் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான் போட்டியில் நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அசாத்திய வெற்றியை பெற்ற பின், நியூசிலாந்து அணி பலமிக்க அணியாக பார்க்கப்பட்டது. அதற்கு அந்த அணியின் தொடக்க வீரர்கள் மிகமுக்கிய காரணமாக பார்க்கப்பட்டனர். அப்படியான தொடக்க வீரர்களான ஃபின் ஆலன் மற்றும் கான்வே ஆகியோரை ஒரே ரன்னில் இலங்கை பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தனர்.

பிலிப்ஸ் கொடுத்த வாய்ப்பு

பிலிப்ஸ் கொடுத்த வாய்ப்பு

தொடர்ந்து அணியை காப்பாற்ற களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன்னையும் 8 ரன்னில் வீழ்த்த, நியூசிலாந்து அணி 15 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டை பறிகொடுத்தது. இதன்பின்னர் க்ளென் பிலிப்ஸ் - மிட்சல் இணை சேர்ந்தது. அடுத்த சில ஓவர்களில் விக்கெட்டை காப்பாற்றியாக வேண்டும், ரன்களையும் சேர்க்க வேண்டும் என்ற நிலை. அந்த நேரத்தில் ஹசரங்கா வீசிய பந்தில் சிக்சர் அடிக்க முயன்று கொடுத்த கேட்ச்சை இலங்கை வீரர் நிசாங்கா தவறவிட்டார். அப்போது பிலிப்ஸ் 13 ரன்களில் இருந்தார்.

பிலிப்ஸ் விஸ்வரூபம்

பிலிப்ஸ் விஸ்வரூபம்

ஆனால் அதன்பின்னர் ஆட்டத்தின் மொத்தக் கட்டுப்பாடும் பிலிப்ஸ் கைகளுக்குள் சென்றது. 10 ஓவர்களில் 54 என்ற ஸ்கோரை உயர்த்திய பிலிப்ஸ், அடுத்த சில ஓவர்களில் விஸ்வரூபத்தை வெளிக்காட்டினார். குறிப்பாக கருணரத்னே வீசிய ஓரே ஓவரில் 18 ரன்கள் விளாசி நியூசிலாந்து அணியின் ப்ரஷரை அப்படியே இலங்கை அணிக்கு மடைமாற்றினார்.

கட்டுக்குள் வந்த ஆட்டம்

கட்டுக்குள் வந்த ஆட்டம்

எதிர்திசையில் நின்றிருந்த வீரர்கள் ஆட்டமிழந்தைப் பற்றி எந்தவித கவலையும் கொள்ளாமல், தொடர்ந்து அணிக்காக ரன்களை சேர்ப்பதையும், பவுண்டரிகள் விளாசுவதிலுமே கவனமாக இருந்தார். ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரி என்று எதிரணியின் பந்துவீச்சை சிதறடிக்க, 19ஓவரில் பவுண்டரி விளாசி சர்வதேச கிரிக்கெட்டில்2வது சதத்தை விளாசினார். இறுதியாக 64 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், அவர் மைதானத்தில் இருந்து வெளியேறும் போது ஓட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று உற்சாக குரல் எழுப்பி மரியாதை கொடுத்தனர்.

வரலாற்று நாயகன்

வரலாற்று நாயகன்

இதில் ஆச்சரியம் என்வென்றால் நியூசிலாந்து அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து 59 பந்துகளுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில், தனி ஒருவரான க்ளென் பிலிப்ஸ் சதம் விளாசி அணியை மீட்டெடுத்துள்ளார். சதம் விளாசிய பின்னர் சிங்கம் கர்ஜிப்பதை போல் பிலிப்ஸ் வெளிப்படுத்திய கர்ஜனை ஒட்டுமொத்த சிட்னி மைதானமும் எதிரொலித்தது. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தாலும், பிலிப்ஸ்-ன் ஆட்டம் காலம் கடந்தும் நிற்கும் என்பதே ரசிகர்களின் பாராட்டாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+