ஆஸ்திரேலியாவில் பயங்கரம்.. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் பலி.. ஷாக் காரணம்!
ஆஸ்திரேலியாவில் உள்ள ரயில் நிலையத்தில் 2 போலீஸ்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் குண்டுகள் பாய்ந்து பலியாகி உள்ளார்.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பவரை 2 போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 குண்டுகள் நெஞ்சில் பாய்ந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் நடந்தது என்ன? போலீசார் எதற்காக தமிழ்நாட்டை சேர்ந்தவரை துப்பாக்கியால் சுட்டனர்? என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று சிட்னி. இங்கு தமிழ்நாடு உள்பட இந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேலும் தொழில் முறை பயணமாகவும் இந்தியர்கள் நிறைய பேர் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.
இந்நிலையில் தான் நேற்று மதியம் 12.30 மணிக்கு சிட்னி மேற்குப்பகுதியில் உள்ள அபர்ன் ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் நின்று கொண்டிருந்தனர். இந்த வேளையில் திடீரென்று அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ரயில் நிலையத்தில் கத்திக்குத்து
அதாவது ரயில் நிலையத்தில் தூய்மை பணி செய்து கொண்டிருந்த நபரை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் தூய்மை பணியாளர் ரத்தக்காயமடைந்த நிலையில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அடுத்த 5 நிமிடத்தில் ரயில் நிலையம் சென்றனர். இதையடுத்து கத்தியால் குத்தி நபரை போலீசார் பிடிக்க முயன்றனர்.

உடலை துளைத்த 2 குண்டுகள்
அப்போது அந்த நபர் போலீஸ்காரர்களையும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ்காரர்களை கத்தியால் குத்த முயன்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து 2 போலீசார் அந்த நபரை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்த நபரின் நெஞ்சில் 2 குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர் சரிந்து விழுந்தார்.

மருத்துவமனையில் உயிரிழப்பு
உடனடியாக அவர் மீட்கப்பட்டு ரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அந்த நபர் இறந்துவிட்டார். இதையடுத்து அவர் யார்? என்பது பற்றிய விசாரணை தொடங்கியது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்
இந்த விசாரணையில் இறந்தவர் பெயர் முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பதும், அவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு வயது 32 என்பதும் தெரியவந்தது. இவர் பிரிட்ஜிங் விசாவில் ஆஸ்திரேலியாவில் இருந்த நிலையில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்ததாக தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதுபற்றி இந்திய துணை தூதரகம் தரப்பில், ‛‛இந்த சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. வெளியுறவு மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அலுவலக காவல்துறை அதிகாரிகளுடன் இதுபற்றி கேட்டு வருகிறோம். அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீசாரிடம் கேட்டுள்ளோம்'' என தெரிவித்துள்ளது.

போலீஸ் கூறுவது என்ன?
இதுபற்றி நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை உதவி ஆணையர் ஸ்டூவர்ட் ஸ்மித் கூறுகையில், ‛‛இது அதிர்ச்சிகரமான சம்பவம். இருப்பினும் அதிகாரிகள் சுடுவதை தவிர வேறு வழியில்லாத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதிகாரிகளுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். இதில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும்'' என்றார். மேலும் அவரது தாக்குதலில் காயமடைந்த தூய்மை பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் நேற்று சிட்னியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications