சென்னை வந்த சிங்கப்பூர் விமானத்தில் மஞ்சள் பையில் கிடந்த 1.6 கிலோ தங்கம்!
சென்னை: சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த, 1.6 கிலோ தங்க நகைகளை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக சென்னை, திருச்சி விமான நிலையங்களில் அவ்வப்போது கடத்தல் தங்கம் பிடிபடுகிறது.

இந்நிலையில் நேற்று காலை சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானத்தில், பயணிகள் சென்ற பின் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இருக்கையின் கீழே கேட்பாரற்ற நிலையில், மஞ்சள் பை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் வெடிகுண்டு ஏதும் இருக்குமோ என்ற சந்தேகத்தில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து விமானத்தில் சோதனை செய்த அதிகாரிகள், கேட்பாரற்றுக் கிடந்த அந்த மஞ்சள் பையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. அந்தப் பையை கைப்பற்றிய அதிகாரிகள் தங்கத்தின் மதிப்பை அளவிட்டனர்.
அதில், 1.6 கிலோ எடை கொண்ட தங்கம் அந்தப் பையில் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு 48 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் சுங்கத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து காலை 9 மணிக்கு சென்னை வந்த அந்த விமானம், பத்தரை மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்லும் என்பதால், யாரேனும் தங்கத்தை கடத்தி வந்திருக்கலாம் என்ற கோணத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications