விரைவில் 1,600 முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும்: பள்ளிக் கல்வி இயக்குனர்
நாகர்கோவில்: விரைவில் 1,600 முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியைகளுககு பாராட்டு விழா நடந்தது.

நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி ஆசிரியர்களுக்கு உள்ளது. பள்ளியில் கணிதப் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் கூட அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்பெண்கள் எடுக்க திணறும் சூழ்நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளை மாற்ற வேண்டும். எம்பிபிஎஸ், பிஇ மட்டும் தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழகம் கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 1000க்கும் மேற்பட்ட தொடக்க நிலை பள்ளிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது 1,600 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் 10 அல்லது 12 நாட்களில் வெளியாகும் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications