கடலூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி - 8 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர்அகரம் கிராமத்தில் நாட்டு பட்டாசு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென பட்டாசு வெடித்து சிதறியது. இந்த விபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி பலியானார். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications