சென்னையில் 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 10 பேர் படுகாயம்
சென்னை: சென்னை, பாரிமுனை ரிசர்வ் வங்கி அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலையில் ஒரு அரசுப் பேருந்து கிளம்பியது. அதேபோல பாரிமுனை பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த இன்னொரு அரசுப் பேருந்து ரிசர்வ் வங்கி அருகே உள்ள சுரங்கப்பாதைக்குள் நுழைந்தது. பாரிமுனையில் இருந்து வந்த பேருந்து சுரங்கப்பாதைக்கு இறங்கிய போது திடீரென எதிரே வந்த பேருந்து மீது மோதியது.
இதில் இரு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 10 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ரிசர்வ் அங்கே உள்ள சுரங்கப்பாதையில் அடிக்கடி பேருந்து விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்தனர். பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications