கிரானைட் முறைகேடு: மேலூர் கோர்ட்டில் மேலும் 10 வழக்குகள்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு வழக்கில் மேலும் பத்து வழக்குகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்துள்ளார். பட்டா நிலத்தில் உள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க கோரி ஆட்சியர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதனையடுத்து பி.ஆர்.பி., ஜி.கே.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக சகாயம் குழு மதுரையில் தீவிர விசாரணையில் குதித்துள்ளது நினைவிருக்கலாம். இந்தக் குழுவிடம் இதுவரை நூற்றுக்கணக்கில் புகார்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications