ஆர்.கே.நகரில் அதிமுகதான் 100 சதவீதம் வெற்றி பெறும்.. எடப்பாடி பழனிச்சாமி சொல்லும் 'அடடே' காரணம்
ஆர்.கே. நகரில் அதிமுக 100 சதவீம் வெற்றி பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை: அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அதிமுக 100 சதம் வெற்றி பெறும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதியின் எம்எல்ஏவாகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மறைந்தார். அவர் மறைந்ததையடுத்து ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று மீண்டும் இடைத்தேர்தலை சந்தித்த போது நட்சத்திர தொகுதியாக மாறிப்போன ஆர்.கே. நகர் தொகுதி, அவர் மறைந்த பின்னர் உருவான காலி இடத்திற்கும் அதே பரபரப்போடு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

விறுவிறு சசி அணி
இந்த தொகுதிக்கு எப்போது தேர்தல் வரும் என்று அரசியல் கட்சிகள் காத்திருந்த நிலையில், வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து ஜெயலலிதாவின் சொந்த தொகுதியை கைப்பற்ற சசிகலா ஆதரவு அதிமுகவினர் களமிறங்கியுள்ளனர்.

சுறுசுறு தினகரன்
இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கூடிய அதிமுக ஆட்சிமன்றக் குழு கூடியது. கூட்டத்தின் இறுதியில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆர்.கே. நகர் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிறுகிறு முதல்வர்
இந்நிலையில், கோவையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தத் தொகுதியில் 100 சதவீதம் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.

சரிசரி விடுங்க..
ஆர்.கே. நகர் தொதியில் வெற்றி வந்தாலும் தான் முதல்வர் இடத்திற்கு வர மாட்டேன் என்றும் முதல்வர் எடப்பாடியார் நன்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் தினகரன் சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்நிலையில் இப்போதைக்கு முதல்வர் பதவி பறிபோகாது என்ற நிலையில், ஆர்.கே. நகரில் தினகரனுக்கு 100 சதவீதம் வெற்றி என்று பழனிச்சாமி சொல்வதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications