சேலத்தில் 105டிகிரி பாரன்ஹீட்..ஆங்காங்கே தகிக்கும் வெப்பம்..உஷார் மக்களே..தப்பிக்க என்ன செய்யலாம்?
சென்னை:
வறண்ட வானிலை நிலவும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் சேலத்தில் அதிகபட்சமாக 40.05 டிகிரி செல்சியஸ் அதாவது 105.44 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு 2 டிகிரி முதல் 3 டிகிரி பாரன்ஹீட் வரைக்கும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில்தான் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகும். ஏப்ரல் மாதத்தின் மத்தியிலேயே பல பகுதிகளில் அனல் காற்று வீச ஆரம்பித்து விட்டது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களில் தற்போதே 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. சேலத்தில் அதிகபட்சமாக 105.05 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பகல் நேரத்தில் வெப்பநிலை இயல்பை விட மூன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ள சூழலில், அடுத்து வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று முதல் 17ஆம் தேதி வரைக்கும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். 18ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி வரை பதிவாகக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, வெயிலை முடிந்த வரையில் தவிர்த்து நிழலில் இருப்பதே அனைவருக்கும் நல்லது என்றும், அதனை தவிர்க்கும்பட்சத்தில் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க வேண்டிய சூழலும் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications