தீபாவளியன்று வேலை நிறுத்தம்.. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவிப்பு
போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளியன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: தீபாவளியன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
25 சதவீதம் போனஸ் என்பன உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நிர்வாகத்துடன் ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, தீபாவளி தினத்தன்று அக்டோபர் 28-ஆம் தேதி இரவு 8 முதல் 29-ஆம் தேதி இரவு 8 மணி வரை சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அறிவிப்புக்கு எதிராக பொது நல வழக்கு தொடர அனுமதி கோரி, பேட்ரீக் என்ற வழக்கறிஞர், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம் முறையிட்டார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு, உரிய நேரத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டால், அந்த மனு பட்டியலிடப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தீபாவளியன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பின்னர் நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications