108 கிலோ பாகற்காய் யாகம்.. தூத்துக்குடி பிரத்தியங்கரா தேவி கோவிலில் கோலாகலம்
தூத்துக்குடி: தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி ஆலயத்தில் உலகமக்கள் சர்வநோய்கள் நீங்கி நலமாக வாழவேண்டி உலகிலேயே முதல் முறையாக 108கிலோ பாகற்காய் மகா யாகம் நடந்தது.
தூத்துக்குடியை அடுத்துள்ள கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர்நகரில் தமிழகத்திலேயே மிக உயரமாக 11அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சுவாமிகள் நிறுவப்பட்டு நாள்தோறும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகளுடன் கூடிய யாகம் நடத்தப்படுகிறது.

இதன்படி வரும் தை அமாவாசையை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் சர்வநோய்கள் நீங்கி நலமாக வாழவேண்டியும், திருமணத்தடை அகலவும், புத்திரபாக்யம் பெறவேண்டியும் பிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு உலகிலேயே முதல்முறையாக 108கிலோ பாகற்காய் மகா யாகம் இன்று நடந்தது.
அத்துடன், 108 கிலோ வத்தல், மூலிகைகளான திப்பிலி, கண்டங்கத்திரி, ஏலக்காய், சுக்கு, மிளகு, வேப்பெண்ணை யாகமும் நடந்தது. பாகற்காய், மூலிகைகள் யாகமானது பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் முன்னிலையில் நடந்தது. யாக வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

மலேசிய பக்தர்கள் வருகை
மகாயாகத்தில் மலேசியா பக்தர்கள் டத்தோ செந்தில்நாதன், டத்தோ கிருஷ்ணன், சீன நாட்டு பக்தை பிரான்சிஸ்கா, மாவட்ட சேவாதள தலைவர் ரமேஷ்கிருஷ்ணன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பிரத்தியங்கிராதேவி, காலபைரவரை வணங்கி சென்றனர்.
உலகில் நல்லமழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், மக்கள் நலமாக வாழவேண்டியும் பிரத்தியங்கிராதேவிக்கு உலகிலேயே முதல் முறையாக 2013கிலோ வத்தல் யாகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications