கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தூக்கி அடிக்கப்பட்ட 11 தாசில்தார்கள்.. கலெக்டர் அதிரடி உத்தரவு!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 66 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அங்கு தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எம். எஸ். பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வட்டாட்சியர்கள் மாற்றம் விவரம் வருமாறு:
1. கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலராக இருந்த சசிகலா, சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியராக இருந்த கோபாலக்கிருஷ்ணன் சங்கராபுரம் தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
3. சங்கராபுரம் தனி வட்டாட்சியராக இருந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி தனி வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக இருந்த அனந்தகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
5. உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியராக இருந்த விஜயபிரபாகரன், கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியராக இருந்த பாலகுரு, வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

7. வாணாபுரம் வருவாய் வட்டாட்சியராக இருந்த குமரன், கள்ளக்குறிச்சி அலுவலக மேலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. கள்ளக்குறிச்சி அலுவலக மேலாளராக இருந்த அனந்தசயனன், கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியாராக (ஆலய நிலங்கள்) நியமிக்கப்பட்டுள்ளார்
9. கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியாராக (ஆலய நிலங்கள்) இருந்த மனோஜ் முனியன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
10. சின்ன சேலம் வருவாய் வட்டாட்சியராக இருந்த கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக இருந்த பிரபாகரன், கள்ளக்குறிச்சி (வன நிர்ணய அலுவலகம்) தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பணி மாறுதல்கள் குறித்து எந்தவித மேல்முறையீடோ, விண்ணப்பமோ ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், புதிய பணி இடத்தில் உடனடியாக சேரவில்லை என்றால் அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications