ஹைட்ரோ கார்பனை எதிர்த்து 113 நாளாக போராட்டம்- கண்டு கொள்ளாத அரசுகள்: அதிருப்தியில் நெடுவாசல் மக்கள்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகத் தொடர்ந்து 113வது நாளாக நெடுவாசல் மக்கள் போராடியும் இதுவரை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆலங்குடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டு கொள்ளாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக நெடுவாசல் மக்கள் 2வது கட்டமாக கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100 கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெண்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையில் நூதனப் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பெண்கள் மற்றும் விவசாயிகள் பிரதமராகவும். முதல்வராகவும் பதவி பிரமாணம் செய்து கொள்வதைப் போன்று சித்தரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதவிர, பெண்களும், விவசாயிகளும் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர். இன்று 113வது நாளாகப் போராட்டம் நடத்தியும் தங்களது கோரிக்கை குறித்து கண்டு கொள்ளாத அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எத்தனை நாட்கள் ஆனாலும் திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று நெடுவாசல் மக்கள் திடமாய் கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications