திருவல்லிக்கேணியில் 12-மாத ஆழ்வார்கள் சிறப்பு நிகழ்ச்சிகள்
சென்னை: ஆழ்வார்களின் பெருமையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் சென்னை 2000 + அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இனைந்து 12-மாத ஆழ்வார்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இதன் துவக்க விழா சென்னை திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1) பொய்கை ஆழ்வார், 2) பூதத்தாழ்வார், 3) பேயாழ்வார், 4) திருமழிசை ஆழ்வார், 5) நம்மாழ்வார், 6) திருமங்கையாழ்வார், 7) தொண்டரடிப் பொடி ஆழ்வார், 8) பெரியாழ்வார், 9) ஸ்ரீ ஆண்டாள்
10) குலசேகர ஆழ்வார், 11) மதுரகவி ஆழ்வார், 12) திருப்பாணாழ்வார். இவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.

ஒவ்வொரு ஏகாதசி அன்றும், ஒரு ஆழ்வாரைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இப்படியாக 12 ஆழ்வார்களைப் பற்றிய சிறப்பு நிகழ்சிகள் 2016 ஆண்டு இறுதி வரை நடத்தப்படும்.
முதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். இதில் பொய்கை ஆழ்வாரைப் பற்றி ஒரு சிறப்பு சொற்பொழிவு நடத்தப்படும். சொற்பொழிவை டாக்டர் எம் எ வேங்கட கிருஷ்ணன் அவர்கள் வழங்குவார்கள்.
கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பொய்கை ஆழ்வார். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சிபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர். மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். திருவெஃகா என்பது காஞ்சிபுரத்தின் ஒரு பகுதி. விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் இத்திருத்தலத்தில் யதோத்தகாரி என்ற பெருமாள் கோயிலின் பொய்கையில், இவர் ஒரு பொற்றாமரையில் அவதரித்ததாகவும், அதனாலேயே இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications