ஆளுநர் விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார்.. செங்கோட்டையன் நம்பிக்கை
124 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதாக அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தினார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு எம்.எல்.ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், 124 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதாகவும் ஆளுநர் விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் உள்ளோம். காவல்துறை எங்களை அச்சுறுத்த முடியாது. காவல் துறை நடத்திய விசாரணையிலும் எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக இருப்பாதவே கூறியுள்ளனர். மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் கூறிய புகாரில் உண்மை இல்லை என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications