For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிறிஸ்துமஸ், பொங்கல் கூட்டம்.. 124 சிறப்பு ரயில்களை விடும் தெற்கு ரயில்வே

Google Oneindia Tamil News

சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்கள் நிரம்பி வழிவதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 124 சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே.

கிறிஸ்துமஸ் மட்டுல்லாமல் சபரிமலை சீசன், தைப்பூசம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு கூடுதலாக இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

கோவை - செங்கல்பட்டு

கோவை - செங்கல்பட்டு

ரயில் எண் 06628 - கோவை - செங்கல்பட்டு இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கோவையிலிருந்து மாலை 3.40 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டுக்கு அடுத்த நாள் காலை 3.05 மணிக்கு வந்து சேரும். இந்த சிறப்பு ரயில் நவம்பர் 24, 26, டிசம்பர் 1, 3, 8, 10, 15, 17, 22, 24, 29, 31, ஜனவரி 5, 7, 12, 14, 19, 21 ஆகிய நாட்களில் இயங்கும்.

செங்கல்பட்டு - கோவை

செங்கல்பட்டு - கோவை

ரயில் எண் 06627 செங்கல்பட்டு - கோவை வாரம் இருமுறை சிறப்பு ரயில் திங்கள், புதன்கிழமைகளில் பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 3 மணிக்கு கோவை போய்ச் சேரும். இந்த ரயில், நவம்பர் 25, 27, டிசம்பர் 2, 4, 9, 11, 16, 18, 23, 25, 30, ஜனவரி 1, 6, 8, 13, 15, 20 22 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

வாரம் இருமுறை சிறப்பு

வாரம் இருமுறை சிறப்பு

அதேபோல ரயில் எண் 06630 கோவை -செங்கல்பட்டு வழி ஈரோடு, திருச்சி, விருத்தச்சலம், ரயில் கோவையிலிருந்து வியாழன், திங்கள்கிழமைகளில் பிற்பகல் 3.40 மணிக்குப் புறப்பட்டு அடுத்த நாள் காலை 3.05 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். இந்த ரயில் நவம்பர் 28, டிசம்பர் 2, 5, 9, 12, 16, 19, 23, 26, 30, ஜனவரி 2, 6, 9, 13, 16, 20, 23 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

ரயில் எண் 06629

ரயில் எண் 06629

நவம்பர் 29, டிசம்பர் 3,6,10,13,17,,20,24,27,31, ஜனவரி 3,7,10,14,17,21,24 தேதிகளில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3 மணிக்கு கோவை சென்றடையும்.

ரயில் எண் 06632

ரயில் எண் 06632

நவம்பர் 30, டிசம்பர் 7,14,21,28, ஜனவரி 1,11,18,25 தேதிகளில் ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும்.

ரயில் எண் 06631

ரயில் எண் 06631

டிசம்பர் 1,8,15,22,29, ஜனவரி 5,12,19,26 தேதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3 மணிக்கு கோவை சென்றடையும்.

இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, விருதாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், வட கோவை இடங்களில் நின்று செல்லும்.

திருச்சி - கோவை வாராந்திர சிறப்பு ரயில்

திருச்சி - கோவை வாராந்திர சிறப்பு ரயில்

ரயில் எண் 06634: நவம்பர் 28, டிசம்பர் 5,12,19,26, ஜனவரி 2,9,16,23 தேதிகளில் வியாழக்கிழமைகளில் திருச்சியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.

ரயில் எண் 06633

ரயில் எண் 06633

டிசம்பர் 4,11,18,25, ஜனவரி 1,8,15,22,29 தேதிகளில் புதன்கிழமைகளில் கோவையில் இருந்து காலை 4 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 06636

ரயில் எண் 06636

நவம்பர் 24, டிசம்பர் 1,8,15,22,29, ஜனவரி 5,12,19 தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு கோவை சென்றடையும்.

ரயில் எண் 06635

ரயில் எண் 06635

நவம்பர் 28, டிசம்பர் 5,12,19,26, ஜனவரி 2,9,16,23 தேதிகளில் வியாழக்கிழமைகளில் கோவையில் இருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 8.15 மணிக்கு திருச்சி சென்றடையும்.

இந்த ரயில்கள் குளித்தலை, கரூர், புகலூர், கொடுமுடி, ஈரோடு, திருப்பூர், வட கோவை இடங்களில் நின்று செல்லும்.

English summary
Southern Railway will run 124 special trains to clear the extra rush of passenger traffic from Christmas through Makaravilakku,Thai Poosam and Pongal. Advance reservation for the above trains will commence on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X