சத்துணவு முட்டை சாப்பிட்ட 13 குழந்தைக்கு வாந்தி, மயக்கம் - ஆத்தூர் அருகே பரபரப்பு
சேலம்: சேலம் அருகே பள்ளியில் சத்துணவு முட்டை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஈச்சம்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் 29 மாணவ, மாணவிகளுக்கு மதிய நேரத்தில் சத்துணவு வழங்கப்படுகிறது.

வழக்கம் போல நேற்றும் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிட்டனர். சத்துணவுடன் முட்டை மற்றும் கொண்டை கடலையும் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவர்கள் மாலையில் பள்ளி முடிந்து வழக்கம் போல் வீட்டிற்கு சென்றனர்.
மாலை 6.30 மணியளவில், செந்தில் என்பவரது மகள் சத்யபிரியா(6) என்ற குழந்தைக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பள்ளியில் சத்துணவு, முட்டை சாப்பிட்ட அதே பகுதியைச் சேர்ந்த தன்யா(5), சகானா(9), தனு(10), சிவரஞ்சனி(9), கிருத்திகா(6), கார்த்திகேயன்(7), ஜெயகுமார்(10), ஞானதமிழரசன்(5), பாலமுருகன்(9), சந்துரு(9), விஸ்வநாதன்(9), சங்கர்(10) ஆகியோருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மல்லியகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications