சேலம் சிறையில் பதட்டம்.. கோகுல்ராஜ் கொலை வழக்கில் 13 கைதிகள் உண்ணாவிரதம்.. ஜாமீன் ரத்தானதால்
ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் 13 கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
சேலம்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட 13 கைதிகளும் சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில், சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜோதிமணி என்ற பெண் இறந்து விட்டார். யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், அவரது ஓட்டுனர் அருண் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, 'ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள, மற்ற 14 பேரும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வேண்டும் என, நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில், செல்வராஜ் என்பவர் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளதால் அவர் ஆஜராகவில்லை. அதனால் மீதமுள்ள 13 பேரும் ஆஜராகினர்.
அப்போது, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததாலும், உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக காரணத்தினாலும் 13 பேரின் ஜாமீனையும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்ட 13 கைதிகளும் சேலம் மத்திய சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவது சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications