சென்னைவாசிகளே கவனம்... வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகை கொள்ளை
சென்னை: சென்னையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து, பெண் மீது மயக்க ‘ஸ்பிரே' அடித்து 14 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 27-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் பாரிமுனையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (45). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில், கீழ் வீடு காலியாக இருந்துள்ளது. எனவே, அங்கு வாடகைக்கு விடப்படும் என பலகை மாட்டப் பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல ஜெகதீஷ் வேலைக்குச் சென்று விட இந்திராணி மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். மாலை 4 மணியளவில் 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர், வீடு வாடகைக்கு கேட்பது போல் இந்திராணியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.
வீட்டிற்கு உள்ளே நின்றபடியே அவரிடம் பேசியுள்ளார் இந்திராணி. அப்போது மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை இந்திராணி முகத்தில் அடித்துள்ளார் அந்நபர். இந்திராணி மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அந்த நபர் இந்திராணி அணிந்திருந்த தாலி சங்கிலி, மோதிரம் என 14 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். நீண்டநேரமாக இந்திராணி மயக்க நிலையிலேயே இருந்துள்ளார்.
நீண்டநேரமாக இந்திராணியின் வீட்டுக் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தார் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இந்திராணி மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக இது தொடர்பாக ஜெகதீஷுக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்கு விரைந்து வந்த ஜெகதீஷ், இந்திராணியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் இது தொடர்பாக வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications