7 நாட்களுக்கு பின்னர் மெரினாவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வாபஸ்: கமிஷனர் ஜார்ஜ்
நிலைமை கட்டுக்குள் உள்ளதால் மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுகிறது என்று கமிஷனர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
ன்னை: சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 29-ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் சென்னை மெரினாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக புரட்சி போராட்டம் நடத்தினர். இதையடுத்து மெரினாவில் அனுமதியின்றி போராட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அங்கு 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் உட்பட 6 இடங்களில் 144 தடை உத்தரவு ஜனவரி 29ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த தடை உத்தரவு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கடற்கரை பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தடை உத்தரவில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சென்னை மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் தடை உத்தரவு திரும்ப பெறப்படுவதாக சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சென்னை மாநகர சட்டப்பிரிவு 41-கீழ் அனுமதி இன்று மெரினாவில் கூடுவது, கூட்டம் நடத்துவதற்கு பழைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மெரினா பகுதியில் போடப்பட்டிருந்த தடை உத்தரவு 7 நாட்களுக்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications