5 ஆண்டுகளில் 918 மணி நேரம் நடந்த சட்டசபை: கேள்வியே கேட்காத கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநடப்புகள்...வெளியேற்றங்கள்... அமளி துமளிகள் என கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டசபை 197 நாட்கள் கூடி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நாள் கூட சபை நடவடிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 29 எம்.எல்.ஏக்கள் ஒரு கேள்வி கூட சட்டசபையில் கேட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சட்டசபை மொத்தம் 918 மணி நேரம் 31 நிமிடங்கள் சபை நடந்துள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கான பதில் உரையில் 7 மணி 28 நிமிடங்கள் முதல்வர் பேசி உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 14வது சட்டசபையில் 2011 மே 23 முதல் 2016 பிப்ரவரி 20 வரை 11 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன. பட்ஜெட் விவாதங்கள் 26 நாட்கள் நடந்தன; 177 உறுப்பினர்கள் பேசினர். அமைச்சர்கள், 138 மணி நேரம் பதில் அளித்துள்ளனர்.

ஓட்டு போட்டு மக்கள் தேர்வு செய்த எம்.எல்.ஏக்களுக்கு மாதந்தோறும் சம்பளம் ரூ.8,000, ஈட்டுப் படி ரூ.7,000, தொலைபேசிப் படி ரூ.5,000, தொகுதிப் படி ரூ.10,000, அஞ்சல் படி ரூ.2,500, தொகுப்புப் படி ரூ.2,500, வாகனப் படிரூ.20,000 ஆக மொத்தம் ரூ.55,000 தரப்படுகிறது.

சட்டசபையில் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டால், நாளொன்றுக்கு ரூ.500 தினப்படி, ரயிலில் 2 டயர் ஏஸி பெட்டியில் பயணிக்க ஆண்டுக்கு ரூ.20,000, அரசு பஸ்களில் ஒருவருடன் விலையில்லா பயணம், ரூ.250 மாத வாடகையில் சட்டமன்ற விடுதியில் அறை, அரசு மருத்துவமனைகளில் குடும்பத்தினருக்குக் கட்டணமின்றி மருத்துவச் சிகிச்சை, முக்கியமான அறுவைச்சிகிச்சைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

அரசு லெட்டர் பேடுகள், கவர்கள் என ஸ்டேஷனரி பொருட்கள், விடுதியில் 24 மணிநேர மருந்தகம், ஏஸி ஜிம், சிறுவர் பூங்கா, இறகுப் பந்து விளையாட்டுத் திடல், கார் பாஸ்கள், மரணமடைந்தால் எம்.எல்.ஏ குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி, குடும்பத்துக்கு மாதம் ரூ.6,000 ஓய்வூதியம், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம், ஆண்டுக்கு ரூ.12,000 மருத்துவப் படி, என எம்.எல்.ஏக்களுக்கு படிகள் வழங்கப்படுகின்றன.

197 நாட்கள் நடந்த சட்டசபை

197 நாட்கள் நடந்த சட்டசபை

ஐந்து ஆண்டுகளில், 197 நாட்கள் சட்டசபை கூடி உள்ளது. 918 மணி நேரம் 31 நிமிடங்கள் சபை நடந்துள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கான பதில் உரையில் 7 மணி 28 நிமிடங்கள் முதல்வர் பேசி உள்ளார். பட்ஜெட் விவாதங்கள் 26 நாட்கள் நடந்தன; 177 உறுப்பினர்கள் பேசினர். அமைச்சர்கள், 138 மணி நேரம் பதில் அளித்துள்ளனர்.

நத்தம் விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன்

முதல்வர், தன் பொறுப்பில் உள்ள துறைகளுக்கு பதில் அளித்து, 6 மணி 45 நிமிடங்கள் பேசி உள்ளார். ஐந்து ஆண்டுகளில் 188 உறுப்பினர்கள், 66 ஆயிரத்து 497 வினாக்கள் அளித்தனர். இதில், 43 ஆயிரத்து, 60 வினாக்கள் அனுமதிக்கப்பட்டன. அதிக பட்சமாக, அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 120 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

கேள்வி கேட்காத முக்கிய புள்ளிகள்

கேள்வி கேட்காத முக்கிய புள்ளிகள்

2011 மே மாதத்தில் அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2016 பிப்ரவரி 20ம் தேதி வரைக்கும வரையில் மொத்தம் 197 நாட்கள் சட்டசபை கூடியுள்ளது.

இந்த 197 நாட்களில் 29 எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் ஒரு கேள்வியைக்கூட கேட்கவில்லை. தி.மு.க தலைவர் கருணாநிதி, எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், ஸ்டாலின் என முக்கியப் புள்ளிகள் ஒரு கேள்விக்கூட கேட்கவில்லை.

கையெழுத்து மட்டும் போட்ட கருணாநிதி

கையெழுத்து மட்டும் போட்ட கருணாநிதி

இந்த ஐந்து ஆண்டுகளில் சட்டசபைக்குள் கருணாநிதி காலடி எடுத்து வைக்கவில்லை. தொடர்ந்து 60 நாட்கள் அவைக்கு வராமல் போனால் எம்.எல்.ஏ

பதவியை இழந்துவிட நேரிடும் என்பதால், அவ்வப்போது லாபியில் வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுப் போய்விடுகிறார் கருணாநிதி.

5 ஆண்டுகளில் கருணாநிதி

5 ஆண்டுகளில் கருணாநிதி

சட்டசபைக்குள் மோட்டார் நாற்காலியில் வர ஏற்பாடு செய்து தாருங்கள் என கருணாநிதி வைத்த கோரிக்கையை சட்டசபை பரிசீலிக்கவில்லை எனவே அவைக்கே வராத காரணத்தால் கருணாநிதி ஒரு கேள்வியும் கேட்கவில்லை.

29 பேர் கேள்வி கேட்காத எம்.எல்.ஏக்கள்

29 பேர் கேள்வி கேட்காத எம்.எல்.ஏக்கள்

234 உறுப்பினர்களில் 29 பேர் கேள்வியே கேட்கவில்லையாம். இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்தான் அதிகம். 21 அ.தி.மு.க-வினர் கேள்வியே கேட்கவில்லை. அதற்கு அடுத்த இடத்தில் 6 தி.மு.க உறுப்பினர்கள் கேள்வி கேட்கவில்லை. பா.ம.கவில் காடு வெட்டி குரு கேள்வி கேட்டவில்லை.

திமுக எம்.எல்.ஏக்கள்

திமுக எம்.எல்.ஏக்கள்

சட்டசபைக்கு வந்த மு.க. ஸ்டாலினும் ஒரு கேள்வியையும் கேட்கவில்லை. துணைத் தலைவராக இருக்கும் துரைமுருகன், தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமியும், எ.வ.வேலுவும் கூட எந்த கேள்வியும் கேட்கவில்லை.

அதிமுக எம்.எல்.ஏக்கள்

அதிமுக எம்.எல்.ஏக்கள்

முன்னாள் அமைச்சர்களான முஹம்மது ஜான், கே.பி.முனுசாமி, கே.டி.பச்சைமால், கே.வி.ராமலிங்கம், செங்கோட்டையன், செந்தமிழன், செந்தில்

பாலாஜி, சி.வி.சண்முகம், என்.ஆர்.சிவபதி ஆகியோரும் ஒரு கேள்வியைக்கூட எழுப்பாமல் பெஞ்சை தேய்த்து இருக்கிறார்கள். கொஞ்சகாலம்

அமைச்சர்களாக இல்லாமல் எம்.எல்.ஏவாக இருந்த காலத்தில் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கோகுல இந்திரா, பி.வி.ரமணா, எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோரும் கேள்வி கேட்கவில்லை.

விஜயகாந்த்

விஜயகாந்த்

சட்டசபையின் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், நாக்கைத் துருத்தி சண்டை போட்டு சஸ்பெண்ட் ஆனார். விவகாரத்துக்குப் பிறகு சட்டசபை விவாதத்தில் பங்கெடுக்க வில்லை. பார்க்கவில்லை. கருணாநிதியைப் போல கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு எம்.எல்.ஏ பதவியைத் தக்கவைத்து வருகிறார். அவைக்கு வந்த நாளில் ஒரு கேள்வியையும் விஜயகாந்த் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+