தமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடையாது...!
சென்னை: தமிழகத்தில் கிட்டத்தட்ட 6152 அரசு பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் சுதாரித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை அவசரம் அவசரமாக கழிப்பறை தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாம்.
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் அனைத்து கல்வி வாரியங்களும் வருகின்றன.

கழிப்பறைகள் பற்றிய ஆய்வு:
அதில் பள்ளிக் கல்வியும் வருவதால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் பள்ளிகளில் முழுமையாக கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதா என்று கடந்த மாதம் ஆய்வு நடத்தியது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்:
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிடைத்த புள்ளிவிவரங்களை பெற்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
பள்ளிகளின் விவரங்கள்:
மாநிலம் வாரியாக வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில், ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை பள்ளிகள் கழிப்பறை இல்லாமல் இயங்கி வருகின்றன என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
20 ஆயிரம் பள்ளிகள்:
அதில் குறிப்பிட்டுள்ளபடி மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் தலா 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிப்பறை தேவை உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகம்:
கர்நாடக மாநிலத்தில் 49 பள்ளிகளிலும், கேரளாவில் 212 பள்ளிகளிலும், குஜராத்தில் 940 பள்ளிகளிலும் கழிப்பறைகள் இல்லை என்று தெரிவித்துள்ளதுடன், தமிழகத்தில் 6152 பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு கேட்கும் அமைச்சகம்:
மாநில அரசுகள், கழிப்பறை கட்டாமல் விட்டது தொடர்பாகவும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியதுடன், மத்திய அரசின் மூலம் பெறுகின்ற நிதியை எதற்காக செலவிட்டுள்ளார்கள், என்ற கணக்கையும் கேட்டுள்ளது.
2057 பள்ளிகள்:
இந்த பட்டியல் வெளியானதை அடுத்து தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சட்டப் பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் படி தமிழகத்தில் 2057 பள்ளிகளில் தான் கழிப்பறை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி தரும் அறிவிப்பு:
அதற்காக ரூபாய் 160 கோடியே 77 லட்சம் நிதியும் ஒதுக்குவதாக அறிவித்தனர். இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தமிழகத்தில் 6152 பள்ளிகளில் கழிப்பறை இல்லை என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு:
இதனையடுத்து தமிழகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தகவல்கள் பெறப்பட்ட பிறகு பள்ளிகளில் கழிப்பறைகள் ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கழிப்பறைகள் கட்டி முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications