For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பக்ரீத்... சென்னைக்கு வந்த 16 ராஜஸ்தான் ஒட்டகங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பக்ரீத்தையொட்டி குர்பானி கொடுப்பதற்காக ராஜஸ்தானிலிருந்து 16 ஒட்டகங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த ஒட்டகங்களை ராயபுரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

வருடா வருடம் இதுபோல ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டு பக்ரீத் அன்று குர்பானி கொடுப்பது வழக்கம்.

24ம் தேதி பக்ரீத்

24ம் தேதி பக்ரீத்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் வருகிற 24ம் தேதி வருகிறது.

குர்பானிக்கு தயார்

குர்பானிக்கு தயார்

இதையொட்டி பக்ரீத்தின்போது குர்பானி கொடுக்க இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆடுகள் முதல் ஒட்டகங்கள் வரை

ஆடுகள் முதல் ஒட்டகங்கள் வரை

ஆடுகள் முதல் ஒட்டகங்கள் வரை குர்பானியாக கொடுக்கப்படும். இந்த நிலையில் சென்னைக்கு 16 ஒட்டகங்கள் குர்பானிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

ராஜஸ்தானிலிருந்து வந்த ஒட்டகங்கள்

ராஜஸ்தானிலிருந்து வந்த ஒட்டகங்கள்

இந்த ஒட்டகங்கள் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து ஒட்டகங்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

ரூ. 75,000 விலை

ரூ. 75,000 விலை

ஒரு ஒட்டகம் ரூ. 60,000 முதல் 75,000 வரை விலை கொடுத்து இவற்றை வாங்கி வந்துள்ளனர். தற்போது இவை ராயபுரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

கூட்டு குர்பானிக்காக

கூட்டு குர்பானிக்காக

இதுகுறித்து இஸ்லாமியர்கள் குழு கூறுகையில், இந்த ஒட்டகங்கள் பக்ரீத் அன்று கூட்டு குர்பானி கொடுக்கப்படும். ஒரு ஒட்டகத்தை 7 பங்காக போட்டு குர்பானி கொடுப்போம். முன்பதிவு அடிப்படையில் இவை குர்பானி பங்காக கொடுக்கப்படும் என்றனர்.

English summary
16 Camels from Rajasthan have arrived in Chennai for Bakrid to be given as Qurbani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X