கள்ளக்குறிச்சி அருகே முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 16 பவுன் நகைகள், ரூ.50,000 கொள்ளை
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமனின் வீட்டில் 16 பவுன் நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ளது சிறுவங்கூர். இங்கு முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமன் வசித்து வருகின்றார். நேற்று முன்தினம் அவர் தனது வீட்டை பூட்டுவிட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள மகன்களை பார்க்கச் சென்றுள்ளார்.
இரவு 8 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு திறக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
உடனே இது குறித்து சிவராமன் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் ஸ்ரீதர் சென்று தடயங்களை பதிவு செய்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் நகைகள், பணம் கொள்ளை போன சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications