Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்கு மறுத்த சிறுமி... எரித்துக்கொன்ற பெற்றோர், அண்ணன் கைது- நாமக்கல்லில் அதிர்ச்சி

திருமணத்திற்கு மறுத்த 16 வயது சிறுமியை பெற்றோரே கொலை செய்தாக கூறப்படும் சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரையும், அண்ணனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா என்பதாகும். நாமக்கல் மாவட்ட வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள்தான் ஐஸ்வர்யா. தங்கராஜ் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கும் அவருடைய உறவினர் சுரேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர்.

இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐஸ்வர்யா, இந்த சம்பவம் குறித்து நாமக்கலில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஐஸ்வர்யா தகவல் அளித்தார். இதனையடுத்து அந்த மைய அதிகாரிகள் ஐஸ்வர்யாவை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

16 year old girl burnt to death in Namakkal

கடந்த புதங்கிழமை காப்பகத்திற்கு சென்ற ஐஸ்வர்யாவின் உறவினர்கள் , அவருடைய தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி, ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்றனர். ஆனால் ஐஸ்வர்யா கடந்த சனிக்கிழமை இரவு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டதாக கூறி அவரது உடலை அவர்களது பெற்றோர்கள் சுடுகட்டில் எரித்து விட்டனர்.

இந்த மரணத்தில் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசில் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் , திருமணத்திற்கு மறுத்தால் அவர் பெற்றோரே எரித்து கொன்றனரா என்று போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டனர்.

குழந்தை திருமணத்திற்கு மறுத்த சிறுமியை எரித்து கொலை செய்த பெற்றோரையும், அண்ணனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+