சிதம்பரம் அருகே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: 4 பேர் கைது

சிதம்பரம் அருகே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகள் வைத்தீஸ்வரி (16).

16 years old girl sexually assaulted and murdered in Chidambaram

இவர் புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி மாலை வீடுதிரும்பவில்லை.

அக்கம்பக்கம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் ஒரத்தூர் காவல் நிலையத்தில் புகார் கூறினர். இந்நிலையில் இன்று அதிகாலை வைத்தீஸ்வர் ஊருக்கு அருகே உள்ள வயலில் சடலமாக காணப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தூர் போலீஸார் வைத்தீஸ்வரியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய வைத்தீஸ்வரியை ஒரு கும்பல் வழி மறித்து பலாத்காரம் செய்துவிட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீஸார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+