பொங்கல் லீவ் முடிஞ்சிருச்சு… வேலைக்கு போகணுமப்பு… ரயில், பஸ்சில் முண்டியடித்த கூட்டம்
சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊர் கொண்டாட இந்த ஆண்டு 8.7 லட்சம் பேர் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி முடித்த மக்கள், விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்ப முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.
திருநெல்வேலி, நாகர்கோவில், விருதுநகர், மதுரை உள்ளிட்ட ஊர்களில் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் அலைமோதினர்.
ரயில்கள், பேருந்துகளில் போதிய இடவசதியின்றி அவதிப்பட்ட பயணிகள் பொங்கல் விடுமுறை கொண்டாடிய சந்தோசத்தையே இழந்துவிட்டனர்.
தை திருநாள் கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூரில் வேலை பார்க்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் சென்றனர்.

குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை போன்ற ஊர்களில் வேலை பார்க்கும், ஆண்களும், பெண்களும் தங்கள் சொந்த ஊரில் குவிந்தனர். விடுமுறை முடிந்ததால் பலர் வேலைக்கு பார்க்கும் இடத்துக்கு செல்ல ஞாயிறன்று மாலை பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர்.
காலை முதலே காத்திருப்பு
முன்பதிவு செய்யாதவர்களுக்கும் காலை முதலே ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்களில் குவிந்தனர். இன்று வேலை நாள் என்பதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் காலையில் புறப்பட்ட குருவாயூர் ரயிலில் இடம் கிடைக்காமல் கூட்டம் அலைமோதியது.
இடமில்லையே
முன்பதிவு செய்யாதவர்களும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியதால் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மாலை புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயணித்தனர். அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது.
ரிசர்வ் செய்தவர்கள்
சென்னை, திருச்சி, பெங்களுரு போன்ற ஊர்களுக்கு செல்பவர்கள் ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.
ஆனால் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்தவர்கள் நிலைதான் மோசமாகி போனது. அவர்களால் நிற்க கூட முடியாத அளவுக்கு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதியால் பலர் தள்ளுமுள்ளில் சிக்கி தடுமாறினர்.
சிறப்பு ரயில்கள்
பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நேற்று இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இது போல் நெல்லை வழியாக திருவனந்தபுரத்தில் இருந்து 16 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளிலும் முன்பதிவு நிரம்பி விட்ட நிலையில் பலருக்கு இடம் கிடைக்கவில்லை.
சிறப்பு பேருந்துகள்
தென்காசி, செங்கோட்டை பணிமனை மூலம் இயக்கப்படும் பேருந்துகளிலாவது இடம் கிடைக்குமா என பலர் முண்டியடித்தனர். செங்கோட்டையில் இருந்து 12 பேருந்துகளும், தென்காசியில் இருந்து 7 பேருந்துகளும் பொங்கலை ஓட்டி இயக்கப்பட்டன. ஆனாலும் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.
நாகர்கோவிலில்
நாகர்கோவிலில் இருந்து வழக்கம்போல் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் சென்னை, பெங்களூரு செல்லும் பயணிகள் ஏற்கெனவே முன்பதிவு செய்து இருந்தனர். அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ரயில் இல்லாட்டி பஸ்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் சென்னை செல்ல பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி, அனந்தபுரி உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளைத் தவிர ஏனைய பயணிகள் முன்பதிவில்லா பெட்டியில் ஏற முடியாமல் அவதிப்பட்டனர்.
தொங்கிக்கிட்டாவது
ரயில்வே போலீஸார் பயணிகள் ஏறுவதற்கு பாதுகாப்பு அளித்தனர். எனினும் ரயில் புறப்படும்போது பயணிகள் ரயிலில் தொங்கியபடியே சென்றனர். மாலை 6 மணி வரை ரயிலில் இடம் கிடைக்காதவர்கள், பேருந்தில் செல்ல வடசேரிக்கு வந்தனர். இதனால் வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஓட்டை உடைசலாய்
சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெரும்பாலானவை திருநெல்வேலி -நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டவை. இந்த பேருந்துகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், இருக்கைகள் போதிய வசதி இல்லாமலும் இருந்ததால், பயணிகள் இந்த பேருந்துகளில் பயணிக்க தயக்கம் காட்டினர். எனினும் வேறுவழியின்றி பலர் இடம் கிடைத்த பேருந்துகளில் வெளியூர்களுக்குச் சென்றனர்.
ஆம்னிபஸ்களில் கொள்ளை
பயணிகளின் கூட்ட நெரிசலை கவனித்த ஆம்னிபஸ்கள் கட்டணங்களை உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அவசரத்திற்கு வேறு வழியில்லை என்று நினைத்தவர்கள் அதிக கட்டணம் செலுத்தி சென்னைக்கு திரும்பினர். இந்த ஆண்டு பொங்கலை கொண்டாட 8.7 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம்.
திருப்பூர், கோவை
தென்மாவட்டங்களில் இருந்து திருப்பூர், கோவைக்கு திரும்பிய தொழிலாளர்களும் பேருந்துகள் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினர். ஒருவழியாக அடித்து பிடித்து பேருந்தில் ஏறி கிளம்பினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications