தனியார் பேருந்தின் மீது தாறுமாறாக மோதிய அரசுப் பேருந்து - 19 பயணிகள் படுகாயம்!
முசிறி: முசிறி அருகே அரசுப் பேருந்து ஒன்று தனியார் பேருந்தின் மேல் மோதிய விபத்தில் 19 பயணிகள் படுகாயமடைந்தனர்.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலத்துக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் முசிறி அருகே உள்ள செவந்திலிங்கபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் பின்னர் முன்னால் திருச்சியில் இருந்து நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின் பகுதியில் பயங்கரமாக மோதி நின்றது.
இதில் இரு பஸ்களிலும் பயணம் செய்த விராலிமலையை சேர்ந்த சகுந்தலா, நடராஜன், பார்த்தசாரதி, திருச்சியை சேர்ந்த விஷ்னு, வினோத்குமார், அரியலூரை சேர்ந்த அகிலா, சிவரஞ்சினி, மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்த கல்பனா, அரியமங்கலம் இளங்கோவன், தாராநல்லூர் நட்ராயன், அரசு பஸ் டிரைவரான திருச்சியை சேர்ந்த பார்த்திபன் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற முசிறி இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications