சென்னை திருமழிசையில் பத்திரிகையாளர் வீட்டில் 19 பவுன் நகை, ரொக்கம் கொள்ளை
சென்னை திருமழிசையில் பத்திரிகையாளர் சங்கர் வீட்டில் 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
Recommended Video

சென்னை: திருமழிசையில் பத்திரிகையாளர் சங்கர் வீட்டில் 19 பவுன் நகைகளும், 14 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை திருமழிசையை சேர்ந்தவர் வி. சங்கர். இவர் தினசரி பத்திரிகையில் ஒன்றில் முதன்மை செய்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேற்று சங்கர், அவரது மனைவி, குழந்தைகள் என அனைவரும் வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிட்டனர்.
தனி வீடு என்பதாலும் பூட்டியிருப்பதாலும் இந்த சந்தர்ப்பத்தை மர்ம நபர்கள் பயன்படுத்த திட்டமிட்டனர். இதையடுத்து அந்த வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது ஒரு அறையில் பீரோவில் இருந்த 19 சவரன் நகை மற்றும் ரூ.14 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
மருத்துவமனைக்கு சென்ற சங்கர் குடும்பத்தினர் வீடு திரும்பியதும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் சங்கர் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications