அடங்காத இலங்கை- தொடரும் அட்டூழியம்! தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர் நடுக்கடலில் சிறை பிடிப்பு!
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்து சிறை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்க கடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையோ எங்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததால் கைது செய்தோம்; சுட்டுக் கொலை செய்தோம்; தாக்குதல் நடத்தினோம் என்கிற கொலைப் பல்லவியை 40 ஆண்டுகளாக பாடி வருகிறது.

தமிழ்நாடு அரசும், மீனவர்கள் கைது நடவடிக்கை விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரையிலான இலங்கை அரசுடனான பேச்சுகளில் மீனவர்கள் குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறதே தவிர, கைது- சிறைபிடிப்புகள் முடிவுக்கு வந்தது இல்லை.
இந்நிலையில் வங்க கடலில் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த 19 மீனவர்களும் தமிழ்நாட்டின் எந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சிறை பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications