1947.. 2014.. அதே காலண்டர்.. அப்படீன்னா??... கெளம்பிட்டாங்கய்யா ஜோசியக்காரர்கள்!!
சென்னை: 67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டிருப்பதால், இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோசியக்காரர்கள் ஆளாளுக்கு ஆரூடம் கூறிக் கிளம்பியுள்ளனராம்.
புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டிக் கொண்டு கலகலப்பாக கிளம்பி விடுவது வழக்கம்தான்.
அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகளை எடுத்து மூளையில் திணிக்கும் வேலைகள் மும்முரமாகியுள்ளன.

67 ஆண்டுகளுக்குப் பின்
1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு.

புதன்கிழமை பிறக்கும் ஜனவரி
1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. அதாவது இரு ஆண்டுகளிலும் ஜனவரி 1ம் தேதி புதன்கிழமை வருகிறது. மற்ற தேதிகளும், கிழமைகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

அதே தேதிகள், அதே கிழமைகள்
அதே 1947ம் ஆண்டு காலண்டரை எடுத்துப் பார்த்தால், அப்படியே 2014 ம் ஆண்டு காலண்டர் போலவே இருக்கும். தேதிகளும், கிழமைகளும் ஒரே மாதிரியாக இல்லை.. இது போதாதா...

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு
1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமைடந்த ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே அதேபோன்ற மாற்றத்தை 2014ம் ஆண்டு இந்தியா மீண்டும் சந்திக்கும் என்று பலர் கணித்துக் கூறியுள்ளனர்.

2014ல் லோக்சபா தேர்தல் வருகிறதே...
இப்போது 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருவதால், இந்த ஆண்டில் இந்தியா பெரும் மாற்றத்தைக் காணும் என்றும் இவர்கள் கிலி கிளப்புகின்றனர்.

வருஷம் பொறக்கட்டும் பார்க்கலாம்
என்ன மாற்றம் வருகிறதோ, என்னவோ.. முதலில் வருடம் நல்லபடியாக பிறக்கட்டும். என்ன வருதுன்னுதான் பார்த்து விடுவோமே...
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications