கரூரில் மாணவி கொலை வழக்கில் 2 பேர் கைது
கரூர்: கரூரில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்காவிற்குட்பட்ட பிச்சம்பட்டியை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி மகள் வினிதா (17) , இவர் கடந்த ஆண்டு +2 படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு விண்ணப்பம் செய்த இடைப்பட்ட காலத்தில் அருகில் உள்ள புலியூரில் தனியார் கொசுவலை கம்பனிக்கு தாற்காலிகமாக வேலைக்கு சென்று வந்துள்ளார்.

வழக்கம் போல் 2014 ஜூன் 23ம் தேதி மாலை பணி முடித்து கம்பெனி வேனில் கிருஷ்ணராயபுரம் வந்து இறங்கிய வினிதா தனது சைக்கிளை எடுத்து கொண்டு பிச்சம்பட்டி நோக்கி சென்றார் அப்போது ஆட்கள் இல்லாத பகுதியில் வினிதாவை இடை மறித்த மர்ம நபர்கள் அருகில் உள்ள வெற்றிலை கொடிக்காலுக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக கரூர் காவல்துறையினர் 13 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் திருட்டு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த குளித்தலை அடுத்த நங்கவரத்தை சேர்ந்த ராமச்சந்திரனை (27) , நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட போது வினிதாவை ராமச்சந்திரன் கொலை செய்தது தெரியவந்தது.

இக்கொலைக்கு உடந்தையாக இருந்த லாலாபேட்டையை சேர்ந்த மணிகண்டனையும் (27) , கைது செய்த காவல்துறையினர் குளித்தலை குற்றவியல் நீதிமன்ற எண் 2ல் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லதா இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications