Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகை, பணத்திற்காக காதலனுடன் சேர்ந்து தோழியை கொன்ற இளம்பெண்: மதுரையில் பயங்கரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு உயிருக்கு உயிராக பழகிய தோழியை கொலை செய்துள்ளார் ஒரு பெண். பாசக்கார பயபுள்ளைகள் அதிகம் வசிக்கும் மதுரையில் இந்த படுபாதக சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்னுடைய காதலனுக்கு பணம் தேவைப்பட்டதால் தோழியை கொலை செய்ததாக கைதான அந்த பெண் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பவித்ரா, 23 என்பதாகும். இவர் மதுரை தல்லாகுளம் பகுதியில் வசித்து வந்தார். இவரது கணவர் ஜெயக்குமார். ஜெயக்குமார் துபாயில் என்ஜினீயராக வேலை செய்துவருவதால் தனது மாமியாருடன் பவித்ரா தல்லாகுளத்தில் வந்தார்.

2 arrested Young housewife murder case

கடந்த வெள்ளியன்று தனது வீட்டுக்குள் பவித்ரா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். புலன்விசாரணைக்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பவித்ராவின் போனில் வந்த அழைப்புகளை ஆய்வு செய்தது காவல்துறை.

பவித்ரா கொல்லப்படுவதற்கு முன் சியாமளா என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவரை விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதையடுத்து அவரை கிடுக்குப் பிடி விசாரணை செய்தனர். இறுதியில் கள்ளக்காதலன் ரமேஷ் உடன் சேர்ந்து பவித்ராவை கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டார் .

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காதலன் ரமேசுக்கு பணம் தேவைப்பட்டதால் வசதியான தோழியான பவித்ராவைக் கொன்றால் பணம் நகை நிறைய கிடைக்கும் என திட்டமிட்டு கொலை செய்ததாக சியாமளா தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று அவரது மாமியார் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் பவித்ரா தனியாக இருப்பதை அறிந்துகொண்டு மிளகாய் பொடு, கயிறு, கத்தியுடன் தயார் நிலையில் சென்றோம். பவித்ராவிற்க்கு போன் செய்துவிட்டுதான் சென்றோம். அவள் எனக்கும் ரமேசுக்கும் காபி போட்டு கொடுத்தால் அப்போது அவள் எதிர்பாராத நேரத்தில் கைகளை கட்டி ரமேஷ் குத்திக் கொலை செய்தான். உடனடியாக பணம் நகையுடன் அங்கிருந்து ஆட்டோவில் சென்றுவிட்டோம் என்று சியாமளா தெரிவித்தார்.

இதனையடுத்து காதலன் ரமேசுடன் அவளை கைதுசெய்தனர். வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் குற்றவியல் நீதி மன்றம்-2 ல் ஆஜார் படுத்தப்பட்ட அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பழகிய தோழியே பணம் நகைக்காக தோழியை கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shiyamala and Ramesh were arrested in connection with 23-year-old housewife J. Pavithra murder case, who was found murdered with multiple injuries in her house at Chinna Chokkikulam under the Tallakulam police station limits late on Friday afternoon.

60 words

நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு உயிருக்கு உயிராக பழகிய தோழியை கொலை செய்துள்ளார் ஒரு பெண். பாசக்கார பயபுள்ளைகள் அதிகம் வசிக்கும் மதுரையில் இந்த படுபாதக சம்பவம் அரங்கேறியுள்ளது. தன்னுடைய காதலனுக்கு பணம் தேவைப்பட்டதால் தோழியை கொலை செய்ததாக கைதான அந்த பெண் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+