இப்படியும் நடக்குமா.. காருக்குள் விளையாடிய 2 குழந்தைகள் பலி.. கள்ளக்குறிச்சி அருகே அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, காருக்குள் விளையாடிய 2 குழந்தைகள், மூடிய கதவை திறக்க முடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமஙகலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனக்கு சொந்தமான காரை பழுதான நிலையில் இருந்ததால் கடந்த ஒரு வருடமாக தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மதியம் அதே பகுதியை சேர்ந்த அய்யனார் மகள் வனிதா(3), ஏழுமலை மகள் ராஜி(7) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராஜாவின் காருக்குள் சென்று விளையாடியுள்ளனர்.
ஆனால் சுமார் 2 மணி நேரமாகியும், அவர்கள் வீடு திரும்பவில்லையாம். இதன்பிறகுதான் பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர்.

காருக்குள் குழந்தைகள்
நீண்ட நேரமாக அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தையை பற்றிய விவரம் தெரியாமல் பதற்றமடைந்தனர். அப்போதுதான், வீட்டின் அருகே நின்ற காருக்குள் பார்த்துள்ளனர். காருக்குள் இரு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்தனர். இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கார் கதவை திறந்து குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

கதவு லாக்
ஆனால் அந்த குழந்தைகள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். காரின் உள்ளே விளையாடியபோது சைல்ட் லாக் காரணமாக, கார் கதவு தானாக மூடியிருக்கலாம். அங்கேயிருந்து கத்திப் பார்த்தும் கண்ணாடிகள் தூக்கிவிடப்பட்டிருந்ததால், வெளியே கேட்டிருக்காது என தெரிகிறது. இந்த நிலையில்தான், காற்று இல்லாமல், பரிதாபமாக அந்த குழந்தைகள் பலிாகியுள்ளனர்.

அதிர்ச்சி
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இருவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் இப்படி
காரில் ஏசி இயக்கப்பட்டால் காற்று உள்ளே வரும். ஆனால் கார் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இருந்ததால்தான், அந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கார் சாவிகளை குழந்தைகளிடம் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும், குழந்தைகளை கார்களுக்குள் ஏறி விளையாட அனுமதிக்க கூடாது என்கிறார்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள்.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications