மின் கோபுரம் அமைக்கும் பணியின்போது கீழே விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு வட மாநில தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து உடுமலைபேட்டைக்கு மின் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது இதற்கான பணி திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ராமக்கவுண்டன்பட்டியில் நடக்கிறது.

இங்குள்ள பழனிச்சாமி என்பவரது தோட்டத்து பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 4 மணிக்கு 60 அடி உயர மின் கோபுரத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக கோபுரத்தில் இருந்த ஒரு இரும்பு பிடிப்பு துண்டித்து விலகியுள்ளது.
இதனால் அதில் தொங்கியபடி வேலை பார்த்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாகிர் அலி திடீரென கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அதே நேரம் அருகில் வேலை பார்த்த சமிரூல் இஸ்லாம் என்பவரும் அப்போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக கீழே விழுந்து இறந்தார். மேலும் ரகீப் என்பவரும் கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications