புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு... 15,659 மாணவர்கள் எழுதுகிறார்கள்
புதுச்சேரியில் இன்று நடைபெறும் பிளஸ்-2 தேர்வில் 15 ஆயிரத்து 659 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதுகின்றனர்
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. இதில் 15,659 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 53 அரசு மற்றும் 82 தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
புதுச்சேரியில் 13, 217 பேர் மற்றும் காரைக்காலில் 2442 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 33 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

இது குறித்து கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறுகையில்,
தேர்வில் முறைகேடுகளை தடுக்க கல்வித்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் தலைமையில் 7 பறக்கும் படைகள், 63 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு மையங்களில் ஷூ, டை , செருப்பு அணிந்து வர தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்கள் செல்போன், கால்குலேட்டர் எடுத்து வர அனமதியில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications