தொடரும் கொடுமை.. பயிர்கள் கருகியதால்... 2 விவசாயிகள் வயலிலேயே சுருண்டு விழுந்து மரணம்
உளுந்து பயிர் கருகிய அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி மரணம் அடைந்தார். தொடரும் விவசாயிகள் மரணத்தால் விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலக்கத்தில் உள்ளனர்.
சென்னை: சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கிறது விவசாய சமூகம். பயிர்கள் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு போளூர் மற்றும் அரியலூரைச் சேர்ந்த 2 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகில் உள்ளது மேல்வன்னியனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன். விவசாயியான இவர் அவரது விளை நிலத்தில் உளுந்து பயிரிட்டுள்ளார். இந்தப் பயிர் போதிய அளவு தண்ணீர் இன்றி காய்ந்து கருகிவிட்டது.

இந்நிலையில், இன்று விவசாய நிலத்திற்கு சென்ற நாராயணன், கருகிய உளுந்து பயிரைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். வேதனையை தாங்க முடியாமல் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. விளை நிலத்திலேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே போன்று அரியலூரில் உள்ள சுடுகூரில் மேலும் ஒரு விவசாயி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
வறட்சியின் காரணமாக, நாளுக்கு நாள் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் மாரடைப்பால் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கோரி வருகின்றனர். என்றாலும் தமிழக அரசு அது குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications