பள்ளிக்கு சென்ற +2 மாணவி மாயம்: பெற்றோர் போலீசில் புகார்
நெல்லை: நெல்லை அருகே பள்ளி மாணவி திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து. அவரது மகள் முத்துமாரி. முத்துமாரி பாவூர்சத்திரம் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
அவர் தினமும் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். நேற்று பள்ளிக்கு சென்ற முத்துமாரி வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
எங்கு தேடியும் முத்துமாரி கிடைக்காததால் அவரது தாயார் விஜயா பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) செந்தாமரைக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பள்ளிக்கு சென்ற மாணவி மாயமாகியுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications