சென்னையில் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் பலி - ரூ.3 லட்சம் அரசு நிவாரணம்
சென்னை: சென்னையில் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவிகள் இருவர் உயிரிழந்தனர். அடையாறில் அரசு உதவி பெறும் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். சுவர் இடிந்ததில் மேலும் ஒரு மாணவி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ. 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.
அவ்வை இல்லம் அறக்கட்டளைக்கு சொந்தமான டிவிஆர் பெண்கள் பள்ளியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் பயன்பாடின்றி இருந்த பாழடைந்த கட்டிடத்தின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பெசன்ட்நகர் ஊரூர் குப்பத்தை சேர்ந்த மாணவிகள் மோனிஷா, நந்தினி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மாணவி சந்தியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அடையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்து நடந்தது பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரூ.3 லட்சம் நிவாரணம்
இதனிடையே பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவிகள் இருவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications