விழுப்புரம்: பட்டாசு ஆலை வெடி விபத்து சிறுவன் உட்பட 2 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.4 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் அருகே பொய்யாப்பாக்கத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் கோயிலுக்கு வாணவேடிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் அருகே பட்டாசுகளை சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது.

இந்நிலையில், இன்று மதியம் 6 தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். இன்று பகல் 1.30 மணியளவில் மருந்துகளில் ஏற்பட்ட உராய்வில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. பட்டாசு கிட்டங்கியில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தில் இதில், பாபு (45), சிறுவன் செல்வராஜ் (7) ஆகியோர் உடல் கருகி பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications