கல்லூரிப் பேருந்து மோதி 2 பேர் பலி.. மக்கள் கொந்தளிப்பு.. பஸ் மீது கல்வீச்சு.. சாலை மறியல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே தனியார் கல்லூரியின் பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கிராமக்கள் ஆவேசத்துடன் போராட்டத்தில் குதித்தனர்.

மதுரை அழகர்கோவில் அருகே உள்ளது நாயக்கன்பட்டி. இங்கு ஜிஎம்எஸ் எம்ஏவிஎம்எம் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் பேருந்தானது பொய்கைக்கரைப்பட்டி அருகே வந்தபோது அது மோதி ராஜீவ், அழகர்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதனால் ஊர் மக்கள் ஆவேசமடைந்தனர். அந்தப் பேருந்தை தடுத்து நிறுத்தி சரமாரியாக அடித்து உடைத்தனர். இதில் அந்தப் பேருந்தின் கண்ணாடிகள் சிதறி உடைந்தன. மேலும் 2 பேருந்துகளும் தாக்கப்பட்டன.
உடல்களுடன் சாலை மறியல் போராட்டத்திலும் கிராம மக்கள் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications