பொள்ளாச்சியில் இரு மாணவிகள் பாலியல் பலாத்காரம்!
கோவை: பொள்ளாச்சியில் பள்ளி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த இரண்டு மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் சார்பில் விடுதி ஒன்றும் ஆலய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், 3 மாணவிகள் உட்பட 20 மாணவர்கள் தங்கி இருக்கின்றனர்.
மலை வாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய இவர்கள் ஆதரவற்ற நிலையில் இங்கு தங்கி, அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் இரவு மாணவர்கள் அனைவரும் படித்து முடிந்ததும் தூங்கச் சென்று விட்டனர்.
இரவு திடீரென மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே விடுதியில் சோதனை செய்யப்பட்டதில் மாணவிகள் இருவர் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த மாணவிகளை தேடி பார்த்தபோது, விடுதிக்கு அருகில் இருந்த கட்டடத்தின் மேல் தளத்தில் மாணவிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்தம் பெருமளவு வெளியேறிய நிலையில் அங்கு மயங்கி கிடந்துள்ளனர்.
இதையடுத்து, அந்த இரண்டு மாணவிகளும் சிகிச்சைக்காக உடனே பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மாணவிகளையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து அந்த மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், போலீசார், விடுதிக்கு அருகில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வரும் குரு என்பவர் மீது சந்தேகம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், விடுதியில் உள்ளவர்கள் யாராவது இதுபோல் செய்திருக்க கூடும் என்றும் அவர்கள் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 2 பள்ளி மாணவிகள் நள்ளிரவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications