For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கியுடன் திரிந்த வட மாநில இளைஞர்கள்.. மடக்கி பிடித்த போலீசார்.. சென்னையில் பரபரப்பு

சென்னை திருவொற்றியூரில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் துப்பாக்கியுடன் திரிந்த இளைஞர்களை கைது செய்த போலீசார்- வீடியோ

    சென்னை: திருவொற்றியூரில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர்களை போலீசார் விரட்டி சென்று கைது செய்துள்ளனர். அவர்களின் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வடசென்னை பகுதியான திருவொற்றியூரில் வடமாநில இளைஞர்கள் சிலர் துப்பாக்கியுடன் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சென்னை வேப்பேரி பகுதியில் துப்பாக்கிகளுடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், 20 துப்பாக்கி குண்டுகள், 2 லட்ச ரூபாய் பணம் மற்றும் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

     2 North Indian youngsters were arrest for having pistols in chennai

    முதல் கட்ட விசாரணையில், அவர்களின் பெயர் பிரதீப், கமல் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியரசு தினவிழாவை சீர்க்குலைக்க அவர்கள் ஏதும் சதித்திட்டம் தீட்டியுள்ளனரா என்ற ரீதியில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    சென்னையில் கூலிவேலை, கட்ட வேலை என்று லட்சக்கணக்கான வடமாநில இளைஞர்கள் தங்கியுள்ளதால், சமீபகாலமாக குற்றச்செயல்கள் பெருகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    2 North Indian youngsters were arrest for having pistols in chennai. CBCID Police is have took them in remand and investigating about the arms. As Republic day celebration are high in the country, the arrest must be considered says police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X