ஆசிரியரை தாக்கிய 2 மாணவர்கள் சஸ்பெண்ட்- கல்வி அதிகாரி நடவடிக்கை
தூத்துக்குடி: தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்த காலம் போய் இப்போது தவறை கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் காலம் வந்து விட்டது. கயத்தார் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரை தாக்கியதோடு அவமானப்படுத்தும் வகையில் பேசிய இரண்டு மாணவர்களை கல்வி அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 7ம் தேதி மாலை 3 மணிக்கு பள்ளி வாளகத்தில் உள்ள வகுப்பறை தடுப்பு சுவரை சில மாணவர்கள் இடித்து தரை மட்டமாக்கினர். இதுகுறித்து தலைமை ஆசிரியை சுதா கோவில்பட்டி கல்வி மாவட்ட அதிகாரியிடம் புகார் செய்தார்.

இதையடுத்து கோவில்பட்டி கல்வி மாவட்ட அதிகாரி செளந்திர நாயகி மாலை பள்ளிக்கு வந்தார். மாணவர்களுக்கு அறிவுரை கூறவும், தவறாக நடக்கும் மாணவர்களை எச்சரிக்கவும் பள்ளியில் மாணவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து பேசினார். அப்போது பிளஸ்டூ வரலாற்று வகுபபறையில் சிலர் சத்தம் போட்டு கொண்டிருந்தனர். அங்கு சென்ற உடற்கல்வி ஆசிரியர் சுப்புராஜ் மாணவர்களை கண்டித்தார். மேலும் கல்வி அதிகாரி வந்துள்ளார். நீங்கள் வந்து அமருங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து உடற்கல்வி ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆசிரியரை மாணவர்கள் தாக்கினர். இதில் அவரது உடை கிழிந்தது. இதை நேரில் பார்த்த கல்வி அதிகாரி அந்த மாணவர்களை அசெம்பளி கூட்டத்தில் தனியாக இருக்க வைத்தார். கூட்டம் முடிந்தவுடன் பளளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காளியப்பன் ஆகியோரிடம் பேசி ஓழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தார்.
இதையடுத்து பிளஸ்டூ வரலாற்று துறை மாணவர்கள் இருவரை பள்ளியிலிருநது சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்களையும், தொடர்ந்து தொந்தரவு தந்து வரும் மாணவர்கள் என 10 பேரின் பெற்றோரை அழைத்து வரவும் அவர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை அறிந்த கயத்தார் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் பள்ளிக்கு விரைந்து வந்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியதுடன் பாதுகாப்புக்கு போலீசாரையும் அனுப்பி வைத்தார். ஆசிரியரை அடித்த மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications