குரூப் 4 தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பம்.. கைதான இரு வட்டாட்சியர்கள் விடுவிப்பு
சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேட்டில் திடீர் திருப்பமாக கைது செய்யப்பட்ட இரு வட்டாட்சியர்களுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பில்லை என்பதால் விடுவிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இடைத்தரகர்கள், அதிகாரிகள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார். ராமேஸ்வரம், கீழக்கரை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 10 பேர் ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது போல் மற்ற பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் கைது செய்யப்பட்டார்.
இவர் குரூப் 4 முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக தெரிகிறது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடு விவகாரத்தில் ஏற்கெனவே வீரராஜ், பார்த்தசாரதி ஆகிய 2 வட்டாட்சியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
குரூப் 4 தரவரிசையில் 100 இடங்களுக்குள் வந்த 39 பேரில் சிலர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் முதன்மை தேர்வு அதிகாரிகளாக இருந்த தாசில்தார்கள் பார்த்த சாரதி, வீரராஜ் இருவரிடம் துருவி துருவி விசாரணை நடத்திய பின், முறைகேட்டில் தொடர்பு இல்லை என தெரிய வந்ததை அடுத்து இருவரையும் சிபிசிஐடி போலீசார் விடுவித்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications