சபலம்... தங்க செயினை திருநங்கைகளிடம் இழந்த வாலிபர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் வாலிபரை விபசாரத்துக்கு அழைத்துச்சென்று நகைபறித்த திருநங்கைகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 ½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்த பாண்டியன். இவர் தனது தங்கைக்கு தேவையான புத்தகங்கள் வாங்க கோவை வந்துள்ளார். பின்னர் அவர் கடந்த 3 ஆம் தேதி இரவில் கோவை வ.உ.சி. பூங்கா அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு காரில் வந்த நபர் ஒருவர் அந்த வாலிபரிடம் தன்னிடம் 2 அழகிகள் இருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

சபலத்தால் வந்த வினை:

அதில் சபலமடைந்த வாலிபர் காரில் ஏறி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஒரு மறைவான இடத்தில் கார் நின்றது. அங்கு 2 பேர் நின்றிருந்தனர். அருகே சென்றபோது அவர்கள் திருநங்கைகள் என்பது தெரியவந்தது.

நகை பறிப்பு:

இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் அங்கிருந்து தப்ப முயன்றார். உடனே அந்த திருநங்கைகள் அந்த வாலிபரை பிடித்து அவருடைய கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துவிட்டு காரில் தப்பிச்சென்றனர்.

டிரைவர் கைது:

இந்த நூதன நகை கொள்ளை குறித்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரகுபதி என்பவரை கைது செய்தனர்.

திருநங்கைகளும் கைது:

தப்பி ஓடிய திருநங்கைகள் 2 பேரையும் தேடி வந்தனர்.இந்நிலையில் காந்திபுரம் பஸ்நிலைய பகுதியில் சுற்றிதிரிந்த அவர்கள் 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மும்தாஜ் மற்றும் இளவஞ்சி ஆகிய 2 திருநங்கைகளும் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்.

நகை மீட்பு:

இவர்களிடம் இருந்து 3½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் இருவரும் போலீஸ் விசாரணைக்காக ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீஸ்நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தனர்.

தகாத வார்த்தைகள்:

அப்போது, திருநங்கைகள் 2 பேரும் கேவலமாக நடந்துகொண்டதுடன் போலீஸ் நிலையத்துக்கு வந்தவர்களை தகாதவார்த்தைகளால் திட்டினர். கைதான 2 பேரும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிந்திப்பீர்களா? :

சமூகத்தில் கவுரமாக வாழ நினைக்கும் பல திருநங்கைகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படிப்பட்ட சிலரால்தான் அவர்களுடைய உரிமை இன்னும் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+